2026 August 19, Wednesday 🌧️ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° ☀️ மட்டக்களப்பு 33°
LIVE
ADB – இலங்கை இடையே புதிய கடன் ஒப்பந்தம்!கட்டுநாயக்கவில் நீர்த்தாரை மரியாதையுடன் வியட்ஜெட் விமானத்திற்கு வரவேற்பு!பெரஹராவை முன்னிட்டு வாகனங்களுக்கு மாற்றுப் பாதைகள் அறிவிப்பு!ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த இளைஞர் STF வசம் சிக்கினார்!மேல் உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்பு!22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக SJB மனு!22 ஆவது திருத்தத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் முதலாவது மனு!பிள்ளையனின் விளக்கமறியல் மேலும் நீடிப்பு!

ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த இளைஞர் STF வசம் சிக்கினார்!

உள்ளூர்August 19, 2026 · 2 hours முன்5
ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த இளைஞர் STF வசம் சிக்கினார்!

பண்டாரகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெந்தேசிவத்த, மஸ்வில பகுதியில் சுமார் 19 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் ஹொரணை பொலிஸ் விசேட அதிரடிப்படை (STF) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (18) ஹொரணை பொலிஸ் விசேட அதிரடிப்படை தலைமையகத்தின் விசேட நடவடிக்கைப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது 18 கிலோகிராம் 672 கிராம் ஐஸ் போதைப்பொருளைத் தம்வசம் வைத்திருந்த பண்டாரகம பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் கைது செய்யப்பட்டு, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.