2026 October 13, Tuesday ⛅ கொழும்பு 25° 🌧️ யாழ்ப்பாணம் 26° ⛅ கண்டி 23° 🌧️ மட்டக்களப்பு 25°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக SJB மனு!

அரசியல்August 18, 2026 · 2 months முன்13
22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக SJB மனு!

தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தால் இன்று (18) பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நீதிமன்றில் சவாலுக்குட்படுத்த ஐக்கிய மக்கள் சக்தி இன்று நடவடிக்கை எடுத்தது.

இதற்கமைய, SC/SD/31/2026 எனும் இலக்கத்தின் கீழ் இந்த மனு இன்று உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் கவனம் திரும்பியுள்ளதோடு, அதன் அரசியலமைப்புச் செல்லுபடியாகும் தன்மை மற்றும் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் நீதிமன்றத்தின் கருத்தைப் பெற்றுக்கொள்வதற்காகவே இவ்வாறு உயர் நீதிமன்றத்தை நாடியது.

அரசியலமைப்பிற்கு மேற்கொள்ளப்படும் எந்தவொரு திருத்தமும் நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பில், அதிகாரப் பகிர்வில் மற்றும் மக்களின் உரிமைகளில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் பற்றி ஆழமாகக் பரிசீலிக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி சுட்டிக் காட்டுகிறது.