2026 October 14, Wednesday 🌧️ கொழும்பு 24° ⛅ யாழ்ப்பாணம் 26° ⛅ கண்டி 22° 🌧️ மட்டக்களப்பு 25°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!

உள்ளூர்August 15, 2026 · 2 months முன்16
ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!

ஓகஸ்ட் 12ஆம் திகதி ஜனாதிபதியுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் தொகுக்கப்படாத முழுமையான வீடியோ பதிவை வழங்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், ஜனாதிபதி ஊடகப் பிரிவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. 

ஓகஸ்ட் 14ஆம் திகதியிடப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில், குறித்த கலந்துரையாடலின் வீடியோ பதிவின் ஒரு பகுதி மட்டுமே தற்போது தமக்குக் கிடைத்துள்ளதாகச் சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. 

வழங்கப்பட்டுள்ள வீடியோவில் ஆரம்பக் கலந்துரையாடலின் ஒரு பகுதி மட்டுமே உள்ளதாகவும், சில பகுதிகளில் ஒலி தெளிவில்லாமல் இருப்பதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதன்படி, கலந்துரையாடல் முழுவதும் இடம்பெற்ற அனைத்து உரையாடல்கள், அவதானிப்புகள் மற்றும் பதில்கள் உட்படச் சட்டத்தரணிகள் சங்கப் பிரதிநிதிகளின் இறுதி கருத்துகளும் அடங்கிய முழுமையான, தொகுக்கப்படாத வீடியோ பதிவை வழங்குமாறு அச்சங்கம் கோரியுள்ளது. 

மேலும், குறித்த வீடியோவை மிகத் தெளிவான ஒலி மற்றும் காட்சித் தரத்துடன் வழங்குமாறும் சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதி செயலகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. 

சட்டத்தரணிகள் சங்கத்தின் நிர்வாகச் செயலாளர் சுரானி சமரசேகரவின் கையொப்பத்துடன் இக்கடிதம் ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.