2026 August 17, Monday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் இன்று கோலாகல கொண்டாட்டம்

உலகம்August 15, 2026 · 2 days முன்13
இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் இன்று கோலாகல கொண்டாட்டம்

இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் இன்று (15) நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ளது.

டெல்லியில் உள்ள செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து, நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.

இந்த நிகழ்வில், தேசிய கீதத்தின் நீண்ட பாரம்பரியத்தை நினைவுகூரும் வகையில், ‘வந்தே மாதரம்’ பாடல் முதல் முறையாக இசைக்கப்படவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அதேவேளை, சென்னை புனித ஜோர்ஜ் கோட்டை கொத்தளத்தில் நடைபெறும் சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்கு தமிழக முதலமைச்சர் விஜய் தலைமை வகிக்கவுள்ளார்.

அவர் இன்று காலை 8.45 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றி வைத்து, சுதந்திர தின உரையாற்றவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.