2026 October 8, Thursday ⛅ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

கடல் சீற்றம் தீவிரம்! வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

உள்ளூர்August 4, 2026 · 2 months முன்3
கடல் சீற்றம் தீவிரம்! வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலைமை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு எச்சரிக்கை அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. 

காலி முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளுக்காக விடுக்கப்பட்டுள்ள இந்த அறிவித்தல் இன்று (03) இரவு 8.00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளதுடன், நாளை (04) இரவு 8.00 மணி வரை செல்லுபடியாகும். 

குறிப்பிட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதுடன், கடற்பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கிறது. 

இதன்காரணமாக மறு அறிவித்தல் வரும் வரை குறித்த கடற்பரப்புகளில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாமென கடற்சார் மற்றும் மீனவ சமூகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதேவேளை, புத்தளம் முதல் கொழும்பு ஊடாக காலி வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதுடன், அப்பகுதிகளும் கொந்தளிப்பாகக் காணப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

எனவே, குறித்த கடற்பரப்புகளில் கடற்றொழில் மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் அவதானத்துடன் செயற்படுமாறும், வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்கால அறிவித்தல்கள் குறித்து அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.