2026 October 11, Sunday 🌧️ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 35° 🌧️ கண்டி 25° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

எரிபொருள் விலையில் மாற்றமில்லை – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

உள்ளூர்July 31, 2026 · 2 months முன்1
எரிபொருள் விலையில் மாற்றமில்லை – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய ஓகஸ்ட் மாதத்தில் எரிபொருள் விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. 

அதன் தலைவர் ஜே.டி. ராஜகருணா இன்று (31) நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இதனைத் தெரிவித்தார். 

இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 414 ரூபாய் என்ற நிலையிலேயே தொடர்ந்தும் நிலவும். 

அத்துடன், ஒட்டோ டீசல் லீட்டர் ஒன்றின் விலை 382 ரூபாயாகவும், ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 495 ரூபாயாகவும் அதே விலையில் தொடர்கின்றது. 

சுப்பர் டீசலின் விலை 478 ரூபாயாகவும், மண்ணெண்ணெய் விலை 285 ரூபாய் என்ற நிலையிலும் மாற்றமின்றி நிலவுவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.