2026 October 12, Monday ⛅ கொழும்பு 24° ⛅ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 21° ⛅ மட்டக்களப்பு 25°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

ஜனாதிபதிக்கும் இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவிற்கும் இடையில் சந்திப்பு!

உள்ளூர்July 28, 2026 · 3 months முன்3
ஜனாதிபதிக்கும் இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவிற்கும் இடையில் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவிற்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இலங்கையில் கிரிக்கெட் விளையாட்டை கட்டியெழுப்பும் போது எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் குறித்து இதன் போது கலந்துரையாடப்பட்டதுடன், நாட்டில் கிரிக்கெட் விளையாட்டின் முன்னேற்றத்திற்காக அரசாங்கத்தினால் வழங்கக்கூடிய பங்களிப்பு மற்றும் ஒத்துழைப்பு குறித்தும் ஜனாதிபதியின் அவதானம் செலுத்தப்பட்டது.

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்ரகீர்த்தி, இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவின் தலைவர் எரான் விக்ரமரத்ன மற்றும் அதன் ஏனைய உறுப்பினர்களான ரொஷான் மஹாநாம, அவந்தி கொழம்பகே, உபுல் குமரப்பெரும, துஷிர ரதெல்ல, சிதத் வெத்தமுனி,டினால் பிலிப் ஆகியோரும் இந்த சந்திப்பில் இணைந்து கொண்டனர்.