2026 August 18, Tuesday ⛅ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 22° ☀️ மட்டக்களப்பு 27°
LIVE
ஹிருணிகா உள்ளிட்ட பிரதிவாதிகளின் வழக்கில் நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!நுவரெலியா கிரகரி வாவியில் பரபரப்பு – இரண்டு சிறுவர்கள் மீட்பு!பாடப்புத்தக விநியோகத்தில் என்ன நடந்தது? விசாரணையில் வெளியாகும் தகவல்கள்ஆகஸ்ட் 21 முதல் 23 வரை ஹப்புத்தாலையில் பிரமாண்ட உணவுத் திருவிழா!பேராசிரியர் ரவீந்திரநாத் கடத்தல் மற்றும் கொலை வழக்கில் முக்கிய திருப்பம்!யாழ்ப்பாணத்தில் உருவாகிறது வட இலங்கையின் மிக உயரமான கட்டிடம்!இலங்கையில் முதல்முறை வங்கிகளுக்குள்ளேயே முகாமையாளர்கள் கைது!ரூ.770 கோடி மதிப்புள்ள அபூர்வ ஓவியங்கள் திருட்டு!

உலகின் மிகவேகமாக வளர்ச்சியடையும் நாடுகளில் இலங்கை! சர்வதேச நிதியமைப்பின் புதிய அங்கீகாரம்.

உள்ளூர்July 28, 2026 · 3 weeks முன்2
உலகின் மிகவேகமாக வளர்ச்சியடையும் நாடுகளில் இலங்கை! சர்வதேச நிதியமைப்பின் புதிய அங்கீகாரம்.

இலங்கை உலகின் மிகவேகமாக வளர்ச்சியடையும் நாடுகளில் ஒன்றாக சர்வதேச நிதியமைப்பினால் (IIF) அறிவிக்கப்பட்டுள்ளது. 

2026 ஆம் ஆண்டிற்கான முதலீட்டாளர் தொடர்புகள் மற்றும் கடன் வெளிப்படைத்தன்மை பற்றிய அறிக்கையின்படி இலங்கைக்கு இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

குறித்த அறிக்கையின் பிரகாரம், மிகவேகமாக வளர்ச்சியடையும் நாடுகளின் வரிசையில் இலங்கை நான்காவது இடத்தைப் பெற்றுள்ளது. 

இதில் முதலிடத்தை வியட்நாமும், இரண்டாம் இடத்தை பெலிஸூம் (Beliz), மூன்றாம் இடத்தை மொசாம்பிக்கும் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

கடன் வெளிப்படைத்தன்மை மற்றும் முதலீட்டுத் தொடர்புகள் ஆகிய துறைகளில் இலங்கை தற்போது வேகமான வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளதாகச் சர்வதேச நிதியமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. 

கடன் வெளிப்படைத்தன்மைக்கான குறிப்பிட்ட தரவரிசையில் இலங்கை 05 ஆம் இடம் வரை முன்னேறியுள்ளது.