2026 October 11, Sunday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 33° 🌧️ கண்டி 26° 🌧️ மட்டக்களப்பு 30°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

ரூ.60 இலட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்!

உள்ளூர்July 26, 2026 · 3 months முன்4
ரூ.60 இலட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்!

சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகையுடன் சீன பிரஜை ஒருவர் இன்று (26) விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 40 வயதுடைய இச்சந்தேகநபர், மலேசியாவின் கோலாலம்பூர் நகரிலிருந்து எயார் ஏஷியா விமான சேவைக்குச் சொந்தமான AK-047 என்ற விமானத்தின் மூலம் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 அவர் தனது இரண்டு பயணப் பைகளுக்குள் சீனாவில் தயாரிக்கப்பட்ட 40,200 சிகரெட்டுகளைக் கொண்ட 201 சிகரெட் கார்ட்டூன்களை மறைத்து வைத்து எடுத்து வந்துள்ளார்.

 கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகளின் பெறுமதி 60 இலட்சத்து முப்பதாயிரம் ரூபா எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 குறித்த சந்தேகநபர் இந்த சிகரெட் தொகையை கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தின் “பச்சை வழி” ஊடாக எடுத்துச் செல்ல முயன்றுள்ளார்.

 இதன்போது விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 சம்பவம் தொடர்பாக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.