2026 August 17, Monday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 28° ☀️ மட்டக்களப்பு 32°
LIVE
நெல் சந்தைப்படுத்தல் சபையின் நெல் கொள்வனவு நடவடிக்கைகள் தொடர்கின்றன!வனஜீவராசிகள் கால்நடை வைத்தியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்கிறது!கால்பந்துக்கு விடை கொடுக்கிறாரா ரொனால்டோ? ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அறிவிப்பு!இந்தியாவின் 462 ஓட்டங்களுக்கு பதிலடி கொடுக்க களமிறங்கும் இலங்கை!14 மாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்த சிறுவன் உயிரிழப்பு!7.7 ரிக்டர் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து புளோரஸில் மீண்டும் சக்திவாய்ந்த அதிர்வு!கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!

ஹட்டனில் மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது

உள்ளூர்September 7, 2025 · 11 months முன்0
ஹட்டனில் மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது

ஹட்டன் எபோட்சிலி தோட்டத்தில் சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த மதுபான போத்தல்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து இன்று காலை குறித்த தோட்டத்திலுள்ள வீடு ஒன்றின் பின்புறத்தில் உள்ள மரக்கறி தோட்டத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த மதுபான போத்தல்களை பொலிஸார் கைப்பற்றினர்.

உரிமம் பெற்ற மதுபானக் கடைகள் மூடப்பட்டிருப்பதால், சந்தேகநபர் அதிக விலைக்கு தோட்டத் தொழிலாளர்களுக்கு விற்பனை செய்வதற்காக மதுபான போத்தல்களை வாங்கி கொண்டு வந்து, தனது தோட்டத்தில் புதைத்ததாக சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று ஹட்டன் தலைமையகப் பொலிஸின் ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.