2026 August 16, Sunday ⛅ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!

போதைப்பொருள் குற்றச்சாட்டு : SLPP உறுப்பினர் நீக்கம்.

உள்ளூர்September 7, 2025 · 11 months முன்3
போதைப்பொருள் குற்றச்சாட்டு : SLPP உறுப்பினர் நீக்கம்.

போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள சம்பத் மனம்பேரி என்பவரை கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும்,இவ்வாறான குற்றச்சாட்டுகளுக்கு தாம் தளர்வான கொள்கையை கடைப்பிடிக்க போவதில்லை என்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது.

சம்பத் மனம்பேரியின் கட்சி உறுப்புரிமையை உடன் அமுலுக்கு வரும் வகையில் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

– அறிக்கையொன்றை வௌியிட்டுள்ள ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன,

அங்குனுகொலபெலஸ்ஸ, தலாவைச் சேர்ந்த சம்பத் மனம்பேரி என்ற எமது கட்சி உறுப்பினர் மீது போதைப்பொருள் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களை தம்வசம் வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அத்தகைய குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளவர்கள் மீது எங்கள் கட்சி ஒருபோதும் தளர்வான கொள்கையைப் பின்பற்றுவதில்லை, அதன்படி, அவரது கட்சி உறுப்பினர் பதவி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தடை செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும்,அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு மிகவும் பாரதூரமான குற்றச்சாட்டு,மேலும் அவர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் மிக விரைவில் முடிவுக்கு வந்து உண்மை பொதுமக்களுக்கு வெளிப்படும் என்று ஒரு கட்சியாக நாங்கள் நம்புகிறோம். என குறிப்பிடப்பட்டுள்ளது.