2026 October 18, Sunday ⛅ கொழும்பு 30° ⛅ யாழ்ப்பாணம் 30° ⛅ கண்டி 29° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

புதுப்பிக்கத்தக்க மின்சார விலை நிர்ணயத்திற்கு மக்கள் கருத்து சேகரிப்பு நிறைவு!

உள்ளூர்July 22, 2026 · 3 months முன்4
புதுப்பிக்கத்தக்க மின்சார விலை நிர்ணயத்திற்கு மக்கள் கருத்து சேகரிப்பு நிறைவு!

புதுப்பிக்கத்தக்க சக்தி மூலங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைக் கொள்முதல் செய்வதற்கான கட்டணத்தைத் தீர்மானிப்பதற்காகப் பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று (22) நிறைவடைவதாக இலங்கை பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 அந்தக் கருத்துக்களின் அடிப்படையில் எதிர்வரும் 6 மாதங்களுக்கான புதுப்பிக்கத்தக்க மின்சாரக் கட்டணங்கள் தீர்மானிக்கப்படவுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் ஜயநாத் ஹேரத் தெரிவித்துள்ளார்.

 இலங்கை மின்சாரச் சீர்திருத்தச் சட்டத்தின்படி, புதுப்பிக்கத்தக்க சக்தி மூலங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை இலங்கை மின்சார சபையின் தொடர்ச்சி நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்யும்போது, அதற்குரிய விலை மற்றும் விலை சூத்திரத்தைத் தீர்மானிக்கும் மற்றும் அங்கீகரிக்கும் அதிகாரம் இலங்கை பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

 அதற்கமைய, சூரிய, காற்று மற்றும் பயோமாஸ் (Biomass) போன்ற புதுப்பிக்கத்தக்க சக்தி மூலங்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைக் கொள்முதல் செய்வதற்கான பொருத்தமான விலை சூத்திரங்கள் தயாரிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக ஜயநாத் ஹேரத் குறிப்பிட்டார்.

 அந்த விலை சூத்திரங்களின் அடிப்படையில் மின்சாரக் கட்டணங்களைத் தீர்மானிப்பது தொடர்பில் சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர் பொதுமக்கள் ஆலோசனைச் செயல்முறை ஆரம்பிக்கப்பட்டதாகவும், அதில் பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான தரவுகள் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.