2026 October 18, Sunday 🌧️ கொழும்பு 30° ⛅ யாழ்ப்பாணம் 31° 🌧️ கண்டி 28° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

நகரங்களுக்கு இடையிலான சேவைக்கு புதிய டீலக்ஸ் பேருந்துகள்!

உள்ளூர்July 21, 2026 · 3 months முன்6
நகரங்களுக்கு இடையிலான சேவைக்கு புதிய டீலக்ஸ் பேருந்துகள்!

இலங்கை போக்குவரத்து சபையின் (இ.போ.ச) நகரங்களுக்கு இடையிலான மற்றும் தூரசேவைகளுக்காக 600 புதிய ‘Deluxe’ ரக குளிரூட்டப்பட்ட (A/C) பேருந்துகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

 2026 ஆம் ஆண்டிற்கான அரசாங்க முதலீட்டு திட்டத்தின் கீழ், இலங்கை போக்குவரத்து சபைக்கு 49 முதல் 54 ஆசனங்கள் கொண்ட 600 ‘Standard’ ரக பேருந்துகளை கொள்வனவு செய்வதற்காக 14,400 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

 இருப்பினும், 2025–2026 வீதி பாதுகாப்பு திட்டத்தின் கீழ், பயணிகள் போக்குவரத்து பேருந்துகளுக்கு புதிய பாதுகாப்பு விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

 அதற்கமைய, நகரங்களுக்கு இடையிலான மற்றும் தூரசேவைகளுக்கு ‘Deluxe’ ரக குளிரூட்டப்பட்ட பேருந்துகளை பயன்படுத்துவது உகந்தது என அடையாளம் காணப்பட்டுள்ளதால், ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள நிதியொதுக்கீட்டின் கீழ் ‘Standard’ ரக பேருந்துகளுக்கு பதிலாக, மிகவும் வசதியான 600 ‘Deluxe’ ரக குளிரூட்டப்பட்ட பேருந்துகளை கொள்வனவு செய்வதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.