2026 October 18, Sunday ⛅ கொழும்பு 26° 🌧️ யாழ்ப்பாணம் 26° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

நச்சு விதை உட்கொண்ட 22 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

உள்ளூர்July 20, 2026 · 3 months முன்7
நச்சு விதை உட்கொண்ட 22 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

திருகோணமலை, கந்தளாய் பகுதியில் ஒருவகை நச்சு விதையை உட்கொண்டமையால் சுகவீனமடைந்த பாடசாலை மாணவர்கள் 22 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தரம் 06 இல் கல்வி பயிலும் 22 மாணவர்களே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் மருத்துவமனையின் மருத்துவ அத்தியட்சகர் சூரியன் செய்திப் பிரிவுக்கு தெரிவித்தார்.

ஆமணக்கு விதையை குறித்த மாணவர்கள் உட்கொண்டிருக்கலாம் என மருத்துவ அத்தியட்சகர் குறிப்பிட்டார்.

ஆரம்பக்கட்ட சிகிச்சைகளின் பின்னர் குறித்த 22 மாணவர்களையும் திருகோணமலை பொது மருத்துவமனைக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கந்தளாய் மருத்துவமனையின் மருத்துவ அத்தியட்சகர் தெரிவித்தார்.

கந்தளாய் பேராறு பகுதியில் தரம் 06 இல் கல்வி கற்ற 20 மாணவர்களும் 02 மாணவிகளுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.