முட்டையின் விலை அதிகரிப்பு!

இன்று முதல் முட்டையின் விலையை அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
குருநாகல், குளியாப்பிட்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அந்தச் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளை முட்டை: 41 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது.
சிவப்பு முட்டை: 42 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது.




