2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 30°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

சுற்றுலாவில் இலங்கைக்கு உற்சாகம்! அரை மாதத்தில் 90 ஆயிரம் வருகை

உள்ளூர்July 19, 2026 · 4 weeks முன்0
சுற்றுலாவில் இலங்கைக்கு உற்சாகம்! அரை மாதத்தில் 90 ஆயிரம் வருகை

ஜூலை மாதத்தின் முதல் 15 நாட்களில் 90,122 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவிக்கிறது. 

வெளியிடப்பட்ட சமீபத்திய தரவுகளின்படி, குறித்த காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து 20,480 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். 

இது மொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகையில் 23% ஆகும். 

அதேபோன்று, சீனாவிலிருந்து 5,494 பேரும், பிரித்தானியாவில் இருந்து 9,277 பேரும், அவுஸ்திரேலியாவிலிருந்து 5,487 பேரும் இக்காலப்பகுதியில் இலங்கைக்கு வந்துள்ளனர். 

மேலும், 2026 ஜனவரி 01 முதல் ஜூலை 15 வரையான காலப்பகுதியில் ஒட்டுமொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகை 1,236,695 ஆகப் பதிவாகியுள்ளது. 

அவர்களில் இந்தியாவிலிருந்து 314,163 சுற்றுலாப் பயணிகளும்,பிரித்தானியாவில் இருந்து 117,844 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளதாக அந்த அதிகார சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.