2026 October 19, Monday ⛅ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 26° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

இரத்மலானை அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து!

உள்ளூர்July 19, 2026 · 3 months முன்7
இரத்மலானை அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து!

இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு தொகுதியில் இன்று (19) காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த குடியிருப்பின் இரண்டாவது மாடியிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தெஹிவளை தீயணைப்புப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.

தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், தெஹிவளை தீயணைப்புப் பிரிவின் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயைக் கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டன.

தற்போது தீ முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தீயணைப்புப் பிரிவினர் மேலும் தெரிவித்தனர். அதிர்ஷ்டவசமாக, இந்த விபத்தினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த மேலதிக விபரங்கள் குறித்து தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.”