2026 October 18, Sunday ⛅ கொழும்பு 30° ⛅ யாழ்ப்பாணம் 30° ⛅ கண்டி 29° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

டெங்கு பரவல் தீவிரம் – மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்!

உள்ளூர்July 17, 2026 · 3 months முன்9
டெங்கு பரவல் தீவிரம் – மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்!

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 73,000 ஐத் தாண்டியுள்ளது என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. 

இதற்கமைய நேற்று (16) வரை நாட்டில் பதிவாகிய டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து, 73,455 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். 

அத்துடன் 50 டெங்கு மரணங்களும் பதிவாகியுள்ளதாக அந்தப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. 

நேற்றைய தினத்தில் மாத்திரம் 1,025 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். 

இவர்களில் அதிகளவான நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 38,700 ஆக காணப்படுகின்றது. 

மேல் மாகாணத்தில் அதிகளவான நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 15,341 என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், கொழும்பு மாவட்டத்தில் 14,625 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். 

இதேவேளை, ஜூலை மாதத்தின் கடந்த 16 நாட்களில் 18,076 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் அதிகளவான நோயாளர்கள் ஜூன் மாதத்திலேயே பதிவாகியுள்ளதுடன், ஜூன் மாதத்தில் மாத்திரம் 21,538 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.