2026 October 17, Saturday 🌧️ கொழும்பு 28° 🌧️ யாழ்ப்பாணம் 29° 🌧️ கண்டி 24°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வு!

உள்ளூர்July 15, 2026 · 3 months முன்2
கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வு!

ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள புதிய கடற்படை முற்றுகை மற்றும் அதற்குப் பதிலடியாக ஈரான் தரப்பில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் காரணமாக, உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை இன்று (15) கணிசமான அளவு அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, ப்ரெண்ட் வகை கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 86.19 டொலராகவும், டபிள்யூ.டி.ஐ (WTI) வகை கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 80.40 டொலராகவும் உயர்ந்துள்ளது.

கடந்த ஜூன் மாத பாதியிலிருந்து பதிவான அதிகபட்ச விலை உயர்வு இதுவென வெளிநாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு தேவையில் சுமார் 20 சதவீதம் ஹோர்முஸ் நீரிணை ஊடாகவே கொண்டு செல்லப்படும் நிலையில், அங்கு ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள தடங்கல்களே இந்த திடீர் விலை உயர்வுக்கு முதன்மைக் காரணமாக அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.