2026 October 10, Saturday 🌧️ கொழும்பு 30° ⛅ யாழ்ப்பாணம் 32° 🌧️ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

காயமடைந்த அதிகாரிகளை நேரில் சந்தித்து நலம் விசாரித்த அமைச்சர்.

உள்ளூர்July 7, 2026 · 3 months முன்5
காயமடைந்த அதிகாரிகளை நேரில் சந்தித்து நலம் விசாரித்த அமைச்சர்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சிறைச்சாலை அதிகாரிகளின் நலம் விசாரிப்பதற்காக, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார நேற்று (06) பிற்பகல் நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலைக்குச் சென்றிருந்தார். 

வைத்தியசாலைக்குச் சென்ற அமைச்சர், காயமடைந்துள்ள அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் மற்றும் தேவையான வசதிகள் குறித்து அங்குள்ள வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்களுடன் கலந்துரையாடினார். 

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த 23 சிறைச்சாலை அதிகாரிகள் நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையிலும், கொழும்பு தேசிய மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வரும் அதேவேளை, 54 கைதிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.