2026 October 10, Saturday ⛅ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 24° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்!

உள்ளூர்June 30, 2026 · 3 months முன்7
அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்!

திருகோணமலையில் உள்ள சுற்றுளாத்தளத்தில் நிலாவெளி கடற்கரையும் பிரதான இடத்தை பிடித்துள்ளது. தினமும் உள்நாட்டு,வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இதனை நாடி வருகின்றனர்.தற்போது சுற்றுலாப் பயணிகளின் வருகை இங்கு அதிகமாக காணப்படுவதை அவதானிக்க முடிகிறது.

குறித்த நிலாவெளி கடலில் நீராடி சுதந்திரமாக தங்கள் பொழுது போக்கை கழிக்கின்றனர்.

இங்கிருந்து கடல் மார்க்கமாக பயணித்து பார்க்க வேண்டிய தேசிய பூங்காக்களில் ஒன்றாக புறாத் தீவும் முக்கியம் பெற்று சிறந்து விளங்குகிறது.

வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள குறித்த தீவை சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டு வருகின்றனர்.

குறித்த தீவுக்கு செவ்வாயின் படகு மூலமாக பயணிக்க வேண்டியுள்ளதால் வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தினால் அமைக்கப்பட்ட பகுதியில் அனுமதிக்கான படகு கட்டணமாக ரூபா 8000 செலுத்தி டிக்கட்டை பெறவேண்டும். ஒரு படகில் ஏழு நபர்கள் மாத்திரமே பயணிக்க முடியும்.

இதன் மூலமாக இவ்வாறான தேசிய பூங்கா ஊடாக அதிக இலாபம் ஈட்ஞக்கூடியதாகவும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் அங்கு செல்வதனாலும் அந்நியச் செலவாணிக்கு பெரிதும் குறித்த சுற்றுலா தளம் பெரிதும் பங்காற்றி வருகிறது.

பயணிகளின் பாதுகாப்புக்காக பொலிஸ் பிரிவின் உயிர் பாதுகாப்பு படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.