2026 October 18, Sunday ⛅ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

நுவரெலியா சீதை அம்மன் ஆலயத்திற்கு இந்திய பக்தர்கள் வருகை!

உள்ளூர்June 21, 2026 · 4 months முன்2
நுவரெலியா சீதை அம்மன் ஆலயத்திற்கு இந்திய பக்தர்கள் வருகை!

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலம், ஜபல்பூர் நகரைச் சேர்ந்த கலாநிதி அகிலேஷ் குமஸ்தா தலைமையிலான ஸ்ரீ இராம பக்தர் குழுவினர் 150 ஆன்மீக பயணிகள் நுவரெலியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க சீதா எலிய சீதை அம்மன் ஆலயத்திற்கு நேற்று (20.06.2026) மாலை 3.30 மணியளவில் வருகை தந்தனர்.

வருகை தந்த பக்தர்கள் ஆலயத்தில் விசேட பூஜை மற்றும் வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், ஆலய வளாகத்தில் சுந்தரகாண்ட பாராயணத்தையும் பக்தி பூர்வமாக மேற்கொண்டனர்.

தொடர்ந்து, ஆலயத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் அவர்களால் வருகை தந்த பக்தர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மேலும், இந்தியாவிலிருந்து வருகை தந்த கலாநிதி அகிலேஷ் குமஸ்தா மற்றும் அண்மையில் இராமாயண ஆய்வுத் துறையில் கலாநிதி பட்டம் பெற்ற பாலா வெங்கட் ஆகியோருக்கும் பொன்னாடை போர்த்தி சிறப்பு கௌரவம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளராக சாந்தகுமார் அவர்கள் செயற்பட்டிருந்தார்.