2026 October 18, Sunday ⛅ கொழும்பு 26° ⛈️ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

பாராளுமன்ற பிரதிப் பொதுச்செயலாளர் வழக்கு மீண்டும் விசாரணைக்கு!

உள்ளூர்June 20, 2026 · 4 months முன்4
பாராளுமன்ற பிரதிப் பொதுச்செயலாளர் வழக்கு மீண்டும் விசாரணைக்கு!

பாராளுமன்ற பிரதிப் பொதுச்செயலாளர் சமிந்த குலரத்ன தனது பணிநீக்கத்திற்கு எதிராகத் தாக்கல் செய்துள்ள எழுத்தாணை மனுவை, எதிர்வரும் ஜூலை 20 ஆம் திகதி உண்மைகளை உறுதிப்படுத்துவதற்காக எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தன்னை பணியில் இருந்து இடைநிறுத்துவதற்கு சபாநாயகர் எடுத்த முடிவு சட்டவிரோதமானது மற்றும் செல்லுபடியற்றது என அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு, மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் ரொஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய ஆயத்த அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மனுதாரரான சமிந்த குலரத்ன சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, இந்த விவகாரம் தொடர்பான உண்மைகளை நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தத் தான் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

சபாநாயகர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி கே.கனகீஸ்வரன், அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க மற்றும் அனில் ஜயந்த பெர்னாண்டோ ஆகியோர் சார்பில் முன்னிலையான நைஜல் ஹட்ச் மற்றும் மற்றொரு எதிர்மனுதாரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சாமர நாணயக்காரவசம் ஆகியோர், இந்த மனுவை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதிலுள்ள சட்டப்பூர்வத்தன்மை குறித்து ஆரம்பக்கட்ட பூர்வாங்க ஆட்சேபனைகளை எழுப்பவுள்ளதாக நீதிமன்றத்திற்குத் தெரிவித்தனர்.

இருதரப்பு சமர்ப்பிப்புகளையும் பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், இந்த மனுவை மீண்டும் வரும் ஜூலை 20 ஆம் திகதி அழைக்குமாறு உத்தரவிட்டது.
முறையான மற்றும் நியாயமான விசாரணை எதுவும் நடத்தப்படாமல், சபாநாயகர் தன்னிச்சையாக எடுத்த இந்த பணியிடை நீக்க முடிவு சட்டத்திற்குப் புறம்பானது என சமிந்த குலரத்ன தனது மனுவில் வாதிட்டுள்ளார்.

எனவே, சபாநாயகரின் அந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி அவர் இந்த எழுத்தாணை கட்டளை மனுவை சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.