2026 October 12, Monday 🌧️ கொழும்பு 25° ☀️ யாழ்ப்பாணம் 30° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

பென்டகனில் காற்றின் தரம் குறைந்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

உலகம்June 12, 2026 · 4 months முன்8
பென்டகனில் காற்றின் தரம் குறைந்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் வளாகத்தில் அபாயகரமான பொருட்கள் சம்பந்தப்பட்ட சம்பவம் மற்றும் காற்றின் தரம் குறைவடைந்துள்ளமை போன்ற காரணங்களால், அதன் சில பகுதிகள் முடக்கப்பட்டுள்ளதுடன் அங்கிருந்த பணியாளர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

பென்டகனின் உள்முகக் கண்காணிப்பு அமைப்புகள், அங்குள்ள காற்றின் தரத்தில் ஏதோவொரு பிரச்சினை நிலவுவதைக் கண்டறிந்ததைத் தொடர்ந்து, இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பென்டகன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

இருப்பினும், இந்தச் சம்பவத்தின் பின்னணியில் உள்ள தீவிரம் மற்றும் பாதிப்புகள் குறித்து தற்போது பாதுகாப்புப் பிரிவினரால் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்த அதிகாரிகள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.