2026 October 12, Monday ⛅ கொழும்பு 23° ⛅ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 21° ⛅ மட்டக்களப்பு 25°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

உலகின் முதல் டிரில்லியனர் யார்? முன்னிலையில் மஸ்க்!

உலகம்June 7, 2026 · 4 months முன்4
உலகின் முதல் டிரில்லியனர் யார்? முன்னிலையில் மஸ்க்!

உலகின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான ஈலோன் மஸ்க், ஒரு டிரில்லியன் அமெரிக்க டொலர் சொத்து மதிப்பை எட்டும் முதல் நபராக மாறக்கூடும் என சர்வதேச பொருளாதார ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, அவரது விண்வெளி ஆய்வு நிறுவனமான SpaceX மற்றும் பல்வேறு தொழில்நுட்ப முதலீடுகளின் தொடர்ச்சியான வளர்ச்சி, அவரது சொத்து மதிப்பை வேகமாக அதிகரித்து வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

பொருளாதார ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள மதிப்பீடுகளின்படி, தற்போதைய வளர்ச்சி வேகம் தொடருமானால், எதிர்வரும் ஆண்டுகளில் ஈலோன் மஸ்கின் மொத்த சொத்து மதிப்பு ஒரு டிரில்லியன் டொலர் என்ற வரலாற்றுச் சாதனையை எட்டக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது உலகின் செல்வந்தர்களின் பட்டியலில் முன்னணி இடத்தை வகித்து வரும் மஸ்க், மின்சார வாகனங்கள், விண்வெளி தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு மற்றும் தொலைத்தொடர்பு உள்ளிட்ட பல துறைகளில் முதலீடுகளை மேற்கொண்டு வருகிறார்.

ஒரு டிரில்லியன் டொலர் சொத்து மதிப்பை எட்டும் முதல் நபர் யார் என்ற உலகளாவிய விவாதம் நீடித்து வரும் நிலையில், அதற்கான முக்கிய போட்டியாளராக ஈலோன் மஸ்க் பார்க்கப்படுகிறார்.