2026 August 16, Sunday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° ⛅ கண்டி 29° ⛅ மட்டக்களப்பு 34°
LIVE
யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!நாட்டின் பல பகுதிகளில் இன்று பல தடவைகள் மழைக்கு வாய்ப்பு!எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!

வெசாக் வாரத்திற்கான விசேட பாதுகாப்புத் திட்டம்

உள்ளூர்May 29, 2026 · 3 months முன்0
வெசாக் வாரத்திற்கான விசேட பாதுகாப்புத் திட்டம்

வெசாக் பண்டிகை காலத்தில் நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப். யூ. வுட்லர் தெரிவித்துள்ளார். 

அத்துடன், வெசாக் வாரத்தில் கலாசாரத்திற்குப் பொருத்தமற்ற வகையில் நடந்துகொள்ளும் நபர்களுக்கு எதிராகச் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

ஸ்ரீலங்கா பொலிஸார் நாட்டின் 25 நிர்வாக மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் விசேட பாதுகாப்புத் திட்டம் ஒன்றையும், அதேபோன்று போக்குவரத்துத் திட்டம் ஒன்றையும் தற்போது தயார் செய்துள்ளனர். 

இந்த முறையும் நாம் முக்கியமாகப் பொதுமக்களுக்கு நினைவூட்டுகிறோம், ஒவ்வொரு வழிபாட்டுத் தலங்களிலும், குறிப்பாகத் தன்சல்கள் மற்றும் வெசாக் வலயங்களை மையப்படுத்தி சிவில் உடையில் உள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களும், புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்களும் உங்களின் பாதுகாப்பிற்காக இருப்பார்கள். 

அதேபோன்று, அலட்சியமாகவும் அபாயகரமாகவும் மற்றும் மற்றவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும் இயக்கப்படும் ஏதேனும் வாகனம், மோட்டார் சைக்கிள் அல்லது முச்சக்கர வண்டி தொடர்பாக 070-4755600 என்ற வாட்ஸ்அப் (WhatsApp) இலக்கத்திற்கோ அல்லது 119, 188 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாகவோ தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.