2026 October 14, Wednesday 🌧️ கொழும்பு 26° 🌧️ யாழ்ப்பாணம் 27° 🌧️ கண்டி 23° 🌧️ மட்டக்களப்பு 27°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

மாகாண சபை தேர்தல் மீண்டும் சர்ச்சை!

உள்ளூர்May 28, 2026 · 5 months முன்3
மாகாண சபை தேர்தல் மீண்டும் சர்ச்சை!

ஆட்சியைப் பிடித்தவுடன் மாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்துவதாக ஆரம்பத்தில் உறுதியளித்தவர்கள், தற்போது தேர்தல் பிரச்சாரங்களில் இருந்து காணாமல் போயுள்ளனர் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக குற்றம் சுமத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

நாட்டின் முக்கிய தீர்மானங்கள் அனைத்தும் அரசாங்கத்தின் அமைச்சர்களால் அல்லது “பெலவத்தை கட்சி காரியாலயத்தின்” செயலாளராலேயே எடுக்கப்படுகின்றன என்பதை நாட்டின் மக்கள் தற்போது தெளிவாகப் புரிந்துகொண்டுள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபை தேர்தல்களை மேலும் ஒத்திவைப்பதற்கான வழிகளையே தேடி வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அத்துடன், தற்போதைய அரசாங்கத்திற்கு எந்தவொரு தேர்தலையும் நடாத்துவதற்கான தகுதியோ அல்லது ஆளுமையோ இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.