2026 October 14, Wednesday ⛅ கொழும்பு 25° 🌧️ யாழ்ப்பாணம் 26° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 25°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

வரதட்சணைக் கொடுமையால் 19 வயது இளம் பெண் உயிரிழப்பு

உள்ளூர்May 21, 2026 · 5 months முன்10
வரதட்சணைக் கொடுமையால் 19 வயது இளம் பெண் உயிரிழப்பு

வரதட்சணைக் கொடுமை காரணமாக இளம் குடும்பப் பெண்ணொருவர் நேற்று (20) தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் – நாவாந்துறையைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் ஜென்சி (வயது 19) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது:

உயிரிழந்த பெண், இரண்டு வருடங்களாகக் காதலித்து வந்த நபரைக் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துள்ளார். எனினும், அந்தப் பெண்ணைக் கணவனின் தாயார் மருமகளாக ஏற்றுக்கொள்ளவில்லை.

அதனைத் தொடர்ந்து, 25 பவுண் தங்க நகையையும், ஒரு வீட்டையும் வரதட்சணையாக வழங்குமாறு கோரி கணவனின் தாயார் அப்பெண்ணை நச்சரித்து வந்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பம் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குடும்பம் என்பதால், அவர்களால் கோரப்பட்ட வரதட்சணையை வழங்க முடியாமல் போயுள்ளது.

இந்த நிலையில், தனது மகனை வெளிநாட்டுக்கு அனுப்ப கணவனின் தாயார் முயற்சித்த வேளையில், தனது கணவனை வெளிநாட்டுக்கு அனுப்ப வேண்டாம் என அப்பெண் கோரியுள்ளார். எனினும், “எனது தாயார் கேட்ட வரதட்சணையைத் தராவிட்டால் நான் வெளிநாட்டுக்குச் செல்வேன்” என அப்பெண்ணின் கணவரும் கூறியுள்ளார்.

இதனால் மன உளைச்சலுக்கும் விரக்திக்கும் உள்ளான அந்தப் பெண், நேற்று காலை தவறான முடிவெடுத்துத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளைத் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.