2026 October 10, Saturday ⛅ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 26° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

இந்த ஆண்டில் மட்டும் 128 காட்டு யானைகள் உயிரிழப்பு!

உள்ளூர்May 21, 2026 · 5 months முன்6
இந்த ஆண்டில் மட்டும் 128 காட்டு யானைகள் உயிரிழப்பு!

இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் 128 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

 கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் மே 15 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியிலேயே இந்த காட்டு யானைகளின் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

 அவற்றில், துப்பாக்கிச் சூட்டுக் காயங்களினால் 20 காட்டு யானைகளும், மின்சாரம் தாக்கியதால் 15 யானைகளும், ஹக்க பட்டாஸ் உட்கொண்டதால் 10 யானைகளும், விவசாயக் கிணறுகளுக்குள் விழுந்ததால் 05 யானைகளும் உயிரிழந்துள்ளன.

 இவற்றுக்கு மேலதிகமாக, விஷம் உட்கொண்டமை, ரயில்களில் மோதியமை மற்றும் நீரில் மூழ்கியமை போன்ற விபத்துக்களினாலும் காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 கிழக்கு பிராந்தியத்திலேயே அதிகளவிலான காட்டு யானைகளின் மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், பொலன்னறுவை மற்றும் அனுராதபுரம் வனஜீவராசி பிராந்தியங்களிலும் யானைகளின் மரணங்கள் பதிவாகியுள்ளன.

 இது தவிர, காட்டு யானைகளின் தாக்குதல்களினால் இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் 35 மனித மரணங்களும் பதிவாகியுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.