2026 October 11, Sunday ⛅ கொழும்பு 30° ⛅ யாழ்ப்பாணம் 35° 🌧️ கண்டி 26° ⛈️ மட்டக்களப்பு 31°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் – RDA சங்கம்

உள்ளூர்May 21, 2026 · 5 months முன்6
கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் – RDA சங்கம்

சம்பள முரண்பாடு உள்ளிட்ட இரண்டு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து இன்று (21) முதல் தொடர் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் (RDA) பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

 தங்களது கோரிக்கைகள் தொடர்பாக இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை நடத்திய போதிலும், அங்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படாமை காரணமாகவே இந்த தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

 இந்த தொழிற்சங்க நடவடிக்கை குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் உமேஷ் அலுதாபொல,

 “RDA பொறியியலாளர்கள், அதிகாரசபைக்கு வெளியே உள்ள மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கள் அல்லது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கள் என பல குழுக்களின் கூட்டங்களில் பங்கேற்கிறார்கள். இந்த கூட்டங்களில் இருந்து விலகியிருக்கவும், அத்துடன் வீதி அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்தின் கீழ் ஒப்படைக்கப்படாத, ஆனால் தேசிய தேவையாகக் கருதி மேற்கொள்ளப்படும் (RDA உடன் நேரடியாக தொடர்பில்லாத) அனைத்துப் பணிகளிலிருந்தும் விலகியிருக்கவும் தீர்மானித்துள்ளோம்.

 இதன் தாக்கம் என்னவென்றால், திட்ட ஒருங்கிணைப்புப் பணிகளில் நாங்கள் பங்கெடுக்காததால் பல சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். தீர்வு கிடைக்காவிட்டால், இந்த தொழிற்சங்க நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்த நடவடிக்கை எடுப்போம்.”