2026 October 12, Monday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 24° ⛅ மட்டக்களப்பு 30°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

பிரேசில், தாய்லாந்திலிருந்து சீனி இறக்குமதிக்கு நடவடிக்கை

உள்ளூர்May 19, 2026 · 5 months முன்2
பிரேசில், தாய்லாந்திலிருந்து சீனி இறக்குமதிக்கு நடவடிக்கை

இந்தியா சீனி ஏற்றுமதியை நிறுத்துவதற்கு எடுத்துள்ள தீர்மானம் காரணமாக, ஏனைய நாடுகளிலிருந்து சீனியை இறக்குமதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

பிரேசில், தாய்லாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து சீனியை இறக்குமதி செய்வது குறித்து தற்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். 

கடந்த 15ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் சீனி ஏற்றுமதியை தற்காலிகமாக நிறுத்துவதற்கு இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது. 

இந்த ஏற்றுமதித் தடையானது எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி வரை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

இலங்கைக்கு அதிகளவில் சீனி இந்தியாவிலிருந்தே இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், இந்தத் தடையின் காரணமாக மாற்று நாடுகளிலிருந்து சீனியை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை இலங்கைக்கு ஏற்பட்டுள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. 

இருப்பினும், தற்போது நாட்டிற்குள் போதுமான அளவு சீனி கையிருப்பு உள்ளதுடன், புதிய இருப்புகளை விரைவாக இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதால் சந்தையில் சீனிக்கு தட்டுப்பாடு எதுவும் ஏற்படாது என அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது. 

ரூபாவிற்கு நிகரான டொலரின் மதிப்பு உயர்வடைந்ததன் காரணமாக தற்போது சந்தையில் சீனி விலையில் சற்று அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதுடன், அது இந்தியா சீனி ஏற்றுமதியை நிறுத்தியதால் ஏற்பட்ட ஒன்றல்ல என்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.