2026 October 15, Thursday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 26° 🌧️ கண்டி 23° 🌧️ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

வெசாக் காலத்தில் பொருத்தமற்ற நிகழ்வுகள் தடை – அதிகாரிகள் அறிவிப்பு

உள்ளூர்May 19, 2026 · 5 months முன்3
வெசாக் காலத்தில் பொருத்தமற்ற நிகழ்வுகள் தடை – அதிகாரிகள் அறிவிப்பு

எதிர்வரும் வெசாக் காலப்பகுதியில் ஏற்பாடு செய்யப்படும் வெசாக் வலயங்கள் மற்றும் தான நிகழ்வுகள் உள்ளிட்ட அனைத்து விசேட திட்டங்களையும் முறைப்படுத்துவதற்காக அரசாங்கம் புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, வெசாக் மத வழிபாட்டின் போது பொருத்தமற்ற நடவடிக்கைகள் அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தெரிவிக்கையில்,

வெசாக் கொண்டாட்டங்களின் போது ‘ஹெட்-பேங்கிங்’ (head-banging) இசை நிகழ்வுகள் மற்றும் ‘பயமுறுத்தும் வீடுகள்’ (haunted houses) போன்றவற்றை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தானசாலைகளை ஏற்பாடு செய்பவர்கள் பௌத்த கொடிகளுக்குப் பதிலாக மஞ்சள் நிறக் கொடிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை சாசன பாதுகாப்பு சபைகளின் மகாசங்கத்தினர் மற்றும் அரச நிறுவனங்கள் இணைந்து இந்த ஒழுங்குமுறைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் எனத் தெரிவித்த அமைச்சர், தானசாலைகள், வெசாக் அலங்காரங்கள், வீதிப் பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து விசேட வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

பாதுகாப்புப் படையினருடனான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, பொருத்தமற்ற அலங்காரங்கள் மற்றும் காட்சிப்படுத்தல்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.