2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 26° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!

ஈரான் தாக்குதல் திட்டம் தற்காலிகமாக நிறுத்தம் – ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!

உலகம்May 19, 2026 · 3 months முன்1
ஈரான் தாக்குதல் திட்டம் தற்காலிகமாக நிறுத்தம் – ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!

அமெரிக்கா ஈரானுக்கு எதிராக முன்னெடுக்க திட்டமிட்டிருந்த இராணுவத் தாக்குதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

கட்டாரின் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி, சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோரின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த தாக்குதலை நிறுத்தி வைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், தற்போது தீவிரமான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அமெரிக்காவுக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் சாதகமான ஒரு முக்கிய உடன்படிக்கை எட்டப்படும் என அரபு நாடுகளின் தலைவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, எந்தவொரு உடன்படிக்கையின்கீழும் ஈரானுக்கு அணு ஆயுதங்களை வைத்திருக்க அனுமதி வழங்கப்படாது எனவும் ட்ரம்ப் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.