2026 October 9, Friday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 23° 🌧️ மட்டக்களப்பு 27°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

ரயில் பாதை பாகங்கள் திருட்டு… 29 வரை விளக்கமறியலில்!

உள்ளூர்May 17, 2026 · 5 months முன்6
ரயில் பாதை பாகங்கள் திருட்டு… 29 வரை விளக்கமறியலில்!

வனவாசல மற்றும் களனி ஆகிய புகையிரத நிலையங்களுக்கு இடையிலான ரயில் பாதையின் பாகங்களைக் கழற்றிய சந்தேக நபரும், அந்தப் பாகங்களை கொள்வனவு செய்த நபரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சந்தேகநபர்கள் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி அவர்களை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

 

நேற்று (16) அதிகாலை களனி மற்றும் வனவாசல ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் ஒன்று விபத்துக்குள்ளானது. 

இரண்டு ரயில் பாதைகளுக்கு இடையே ரயில்களைப் பாதை மாற்றுவதற்காகப் பயன்படுத்தப்படும் ‘பொய்ண்ட்’ பகுதியின் இரும்புகளை அகற்றியமையே இந்த விபத்துக்குக் காரணம் என ரயில்வே திணைக்களத்தின் போக்குவரத்து அத்தியட்சகர் அசங்க சமரசிங்க தெரிவித்தார். 

பேலியகொட பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, இந்த ரயில் பாதையின் பாகங்களைக் கழற்றிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருந்தார். 

இவர் போதைப்பொருளுக்குக் கடுமையாக அடிமையானவர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், இந்த இரும்புப் பாகங்களை 3 ஆயிரம் ரூபாய்க்கு கொள்வனவு செய்த மற்றுமொரு நபரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.