2026 October 12, Monday ⛅ கொழும்பு 24° ⛅ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 21° ⛅ மட்டக்களப்பு 25°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

பல நீர்த்தேக்கங்கள் வான்பாயும் நிலை!

உள்ளூர்May 15, 2026 · 5 months முன்0
பல நீர்த்தேக்கங்கள் வான்பாயும் நிலை!

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள 21 பிரதான நீர்த்தேக்கங்களும், 19-க்கும் மேற்பட்ட நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் தற்போது வான்பாய்கின்றன. 

நீர்ப்பாசன பணிப்பாளர் நீர் முகாமைத்துவ பொறியியலாளர் எச்.எம்.பி.எஸ்.டி ஹேரத் குறிப்பிடுகையில், இன்று (15) காலை 6.00 மணி நிலவரப்படி இந்த நிலைமை பதிவாகியுள்ளதாகத் தெரிவித்தார். 

அநுராதபுரம் மாவட்டம்: ராஜாங்கனை, நாச்சிதூவ மற்றும் யாண் ஓயா நீர்த்தேக்கம். 

பதுளை மாவட்டம்: அம்பேவெல நீர்த்தேக்கம். 

ஹம்பாந்தோட்டை மாவட்டம்: லுணுகம்வெஹெர, திஸ்ஸ வாவி, வீரவில யோத வாவி மற்றும் வெஹெரகல நீர்த்தேக்கம். 

குருநாகல் மாவட்டம்: அம்பகொல வாவி, உஸ்கல சியம்பலன்கமுவ, மெதியாய, மாகல்ல மற்றும் தெதுரு ஓயா நீர்த்தேக்கம். 

கண்டி மாவட்டம்: நாலந்தா மற்றும் வாமடில்ல நீர்த்தேக்கங்கள். 

மொனராகலை மாவட்டம்: ஹதபானகல மற்றும் அலிகொடஆர நீர்த்தேக்கங்கள். 

புத்தளம் மாவட்டம்: இகிணிமிட்டிய மற்றும் தப்போவ நீர்த்தேக்கங்கள். 

மன்னார் மாவட்டம்: யோத வாவி. 

அதேநேரம் இன்று காலை 6.00 மணியளவில் ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகள் தலா 3 அடி வீதம் திறக்கப்பட்டு, விநாடிக்கு 1,600 கன அடிக்கும் அதிகமான நீர் கலா ஓயாவிற்கு திறந்து விடப்படுகிறது. 

லுணுகம்வெஹெர நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகள் தலா 4 அங்குலம் வீதம் திறக்கப்பட்டு, விநாடிக்கு 1,740 கன அடி நீர் கிரிந்தி ஓயாவிற்கு திறந்து விடப்பட்டுள்ளது. 

வெஹெரகல நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகள் தலா 3 அங்குலம் வீதம் திறக்கப்பட்டு, விநாடிக்கு 700 கன அடி நீர் மாணிக்க கங்கைக்கு திறந்து விடப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அலிகொடஆர நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் தலா 3 அடி வீதம் திறக்கப்பட்டு, விநாடிக்கு 680 கன அடி நீர் கிரிந்தி ஓயாவிற்கு திறந்து விடப்படுகிறது. 

யாண் ஓயா நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. ஒரு கதவு 6 அங்குலமாகவும், ஏனைய இரண்டு கதவுகள் தலா 4 அங்குலம் வீதமும் திறக்கப்பட்டுள்ளன 

தப்போவ நீர்த்தேக்கத்தின் 12 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.