2026 October 11, Sunday ⛅ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° 🌧️ மட்டக்களப்பு 25°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

மட்டக்களப்பில் சோகம்!

உள்ளூர்May 13, 2026 · 5 months முன்3
மட்டக்களப்பில் சோகம்!

இலங்கையில் தற்போது நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) அறிவித்துள்ளது.

இன்று (13) காலை 10.00 மணி வரை வெளியிடப்பட்ட அனர்த்த நிலவர அறிக்கையின்படி, மட்டக்களப்பு – கோறளைப்பற்று தெற்கு பகுதியில் இந்த மரணம் பதிவாகியுள்ளது.

அத்துடன் இரத்தினபுரி, காலி, மொனராகலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய நான்கு மாவட்டங்களில் 62 குடும்பங்களைச் சேர்ந்த 203 பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இரத்தினபுரி மாவட்டத்தில் 07 குடும்பங்களைச் சேர்ந்த 17 நபர்கள் தற்காலிகப் பாதுகாப்பு முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

நிலவி வரும் கடும் மழை மற்றும் காற்று காரணமாக 39 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், ஒரு சிறு மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தக நிலையமும் சேதமடைந்துள்ளது.

தொடர்ந்து நிலவி வரும் வானிலை மாற்றங்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.