2026 August 17, Monday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
ரூ.770 கோடி மதிப்புள்ள அபூர்வ ஓவியங்கள் திருட்டு!நெல் சந்தைப்படுத்தல் சபையின் நெல் கொள்வனவு நடவடிக்கைகள் தொடர்கின்றன!வனஜீவராசிகள் கால்நடை வைத்தியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்கிறது!கால்பந்துக்கு விடை கொடுக்கிறாரா ரொனால்டோ? ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அறிவிப்பு!இந்தியாவின் 462 ஓட்டங்களுக்கு பதிலடி கொடுக்க களமிறங்கும் இலங்கை!14 மாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்த சிறுவன் உயிரிழப்பு!7.7 ரிக்டர் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து புளோரஸில் மீண்டும் சக்திவாய்ந்த அதிர்வு!கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!

தெனியாயவில் பரவும் நோய் தொடர்பில் கண்டறிய விசேட மருத்துவக் குழு!

உள்ளூர்May 8, 2026 · 3 months முன்2
தெனியாயவில் பரவும் நோய் தொடர்பில்  கண்டறிய விசேட மருத்துவக் குழு!

தெனியாய பகுதியில் பாடசாலை மாணவர்களிடையே வேகமாகப் பரவி வரும் காய்ச்சல் நிலைமை குறித்துக் கண்டறிய, சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் விசேட மருத்துவக் குழுவினர் அப்பகுதிக்கு வரவுள்ளதாக மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுமித் மனதுங்க தெரிவித்துள்ளார். 

சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைக்கமைய, நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் ஒரு நடவடிக்கையாக தெனியாய வலயக் கல்விப் பணிப்பாளர் நிஷாகா ஹெட்டிகொடவினால் நேற்று (07) மற்றும் இன்று (08) தெனியாய வலயத்தைச் சேர்ந்த 4 பாடசாலைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

தெனியாய மத்திய மகா வித்தியாலயம், தெனியாய ராஜபக்ச மகா வித்தியாலயம், தெனியாய புனித மத்தியூ இருமொழி வித்தியாலயம் மற்றும் பல்லேகம சித்தார்த்த வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளே இவ்வாறு மூடப்பட்டுள்ளன. 

குறித்த பாடசாலைகளின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே நோய் பரவல் அதிகரித்துள்ளதைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.