2026 October 10, Saturday ⛅ கொழும்பு 24° ⛅ யாழ்ப்பாணம் 26° ⛅ கண்டி 21° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

பல மாகாணங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்கள எச்சரிக்கை!

உள்ளூர்May 7, 2026 · 5 months முன்5
பல மாகாணங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்கள எச்சரிக்கை!

நாட்டின் பல மாகாணங்களில் நிலவும் வெப்பமான வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 

இன்று பிற்பகல் 03.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பானது, நாளை (08) தினத்திற்குச் செல்லுபடியாகும் வகையில் விடுக்கப்பட்டுள்ளது. 

சப்ரகமுவ, வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு மாகாணங்களிலும் மற்றும் ஹம்பாந்தோட்டை, மொனராகலை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் பகல் நேர வெப்பச் சுட்டெண், அதாவது மனித உடலுக்கு உணரப்படும் வெப்பமானது “கவனம் செலுத்த வேண்டிய” மட்டத்தில் காணப்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.