2026 October 11, Sunday ⛅ கண்டி 22°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

மாலைதீவு ஜனாதிபதி இன்று இலங்கை வருகை!

உள்ளூர்May 3, 2026 · 5 months முன்7
மாலைதீவு ஜனாதிபதி இன்று இலங்கை வருகை!

மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் முய்ஸ்சு அரச முறைப் பயணமாக இன்று இலங்கை வரவுள்ளார். 2023ஆம் ஆண்டு பதவியேற்ற பின்னர் அவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் இதுவாகும்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் வருகை தரும் அவர், எதிர்வரும் 6ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளையும் ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் ஜனாதிபதி முய்ஸ்சு இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.