2026 October 12, Monday ⛅ கொழும்பு 24° ⛅ யாழ்ப்பாணம் 26° ⛅ கண்டி 22° ☀️ மட்டக்களப்பு 25°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

உள்ளூர்May 1, 2026 · 5 months முன்7
எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

இன்றைய தினம் (01) எந்தவொரு எரிபொருள் விலை திருத்தமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் உரிய தீர்மானம் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக, கடந்த மார்ச் 21ஆம் திகதி எரிபொருள் விலைகள் திருத்தப்பட்டன. அதன் போது,

ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றர் 317 ரூபாவிலிருந்து 398 ரூபாவாக,ஒக்டேன் 95 ரக பெற்றோல் ஒரு லீற்றர் 365 ரூபாவிலிருந்து 455 ரூபாவாக அதிகரிக்கப்பட்டது.

ஒட்டோ டீசல் ஒரு லீற்றர் 303 ரூபாவிலிருந்து 382 ரூபாவாக ,சுப்பர் டீசல் ஒரு லீற்றர் 353 ரூபாவிலிருந்து 443 ரூபாவாக அதிகரிக்கப்பட்டது. மண்ணெண்ணெய் ஒரு லீற்றர் 195 ரூபாவிலிருந்து 255 ரூபாவாக அதிகரிக்கப்பட்டது.