2026 October 10, Saturday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 23° ☀️ மட்டக்களப்பு 29°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

இயற்கையைப் பாதுகாக்க ஒரு புதிய முயற்சி!

உள்ளூர்April 30, 2026 · 5 months முன்7
இயற்கையைப் பாதுகாக்க ஒரு புதிய முயற்சி!


மத்திய மலைநாட்டைப் பாதுகாப்பதற்கும் போஷிப்பதற்குமான புதிய அதிகாரசபையை நிறுவும் நடைமுறையின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கலந்துரையாடல், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.

  ஜனாதிபதி செயலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

 கடந்த ‘டித்வா’ (Ditwa) புயலின் போது ஏற்பட்ட மண்சரிவுகளால் மத்திய மலைநாட்டிற்கு பெரும் பாதிப்புகள் ஏற்பட்டன. 

 இதனால் மத்திய மலைநாட்டைப் பாதுகாத்து போஷிக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி இதன்போது கடுமையாக வலியுறுத்தினார். 

 இதன்படி, மேல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளின் சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் கண்டறிந்து, மத்திய மலைநாட்டைப் பாதுகாப்பதற்காகத் தனியான அதிகாரசபை ஒன்றை நிறுவுவதற்குத் தீர்மானிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. 

 இந்த நடைமுறை தொடர்பான முன்னேற்றம் மற்றும் சட்ட ஏற்பாடுகள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டதுடன், 

 அதற்கான முன்மொழிவுகளும் கருத்துகளும் முன்வைக்கப்பட்டன. அத்தனை முன்மொழிவுகளையும் கருத்திற் கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு இதன்போது அறிவுறுத்தல் வழங்கினார்.