2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 25° ☀️ யாழ்ப்பாணம் 28° 🌧️ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு

உலகம்April 23, 2026 · 4 months முன்0

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்கான வாக்​குப் ​பதிவு நிறைவடைந்துள்ளது. இன்று காலை 7.00 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 6.00 மணிக்கு நிறைவடைந்துள்ளது. மாலை 6.00 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வந்தால் இரவு 8.00 மணி வரை வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. 

மாலை 5.00 மணி நிலவரப்படி 82.24% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக கரூரில் 89.32% வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக கன்னியாகுமரியில் 73.44% வாக்குகள் பதிவாகியுள்ளன. தலைநகர் சென்னையில் மாலை 5.00 மணி நிலவரப்படி 81.34% வாக்குகள் பதிவாகியுள்ளன. 

இவற்றில் தொகுதி வாரியாகப் பார்த்தால் சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகரில் அதிகபட்சமாக 87.12% வாக்குகளும், குறைந்தபட்சமாக மயிலாப்பூரில் 72.79% வாக்குகளும் பதிவாகியுள்ளன. இதன்படி தமிழக சட்டமன்ற தேர்தலில் இதுவரை 4 கோடியே 71 லட்சம் பேர் வாக்களித்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. 

கடந்த வருடத்தில் மாலை 5.00 மணியளவில் 4 கோடி பேர் வாக்களித்திருந்த நிலையில் இம்முறை அதனை விட 70 லட்சம் வாக்குகள் அதிகளவில் பதிவாகியுள்ளன.