2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

அஜித் குறித்து பரவும் தகவல் வெறும் வதந்தியே! மேலாளர் விளக்கம்

உலகம்April 23, 2026 · 4 months முன்2
அஜித் குறித்து பரவும் தகவல் வெறும் வதந்தியே! மேலாளர் விளக்கம்


தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் கட்சி என நான்கு முனை போட்டி நிலவுகிறது. 

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் காலை 7.00 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு தொடங்கியது முதல் வரிசையில் நின்று மக்கள் ஆர்வமாக தங்கள் ஜனநாயக கடமையாற்றினர். 

திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் முதல் நபராக நடிகர் அஜித் குமார் வாக்கு செலுத்தினார். அப்போது ‘No Need’ என அஜித்குமார் கூறியதாக தகவல் பரவியது இந்நிலையில் இதுதொடர்பாக அஜித் குமார் மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கம் அளித்தார். 

நடிகர் அஜித் குமார் ஆட்சி மாற்றம் தேவையில்லை என்று கூறியதாக பரவி வரும் தகவல் தவறானது. அவர் அப்படி எந்த கருத்தையும் வெளியிடவில்லை என்று அவர் தெரிவித்தார்.