2026 October 11, Sunday ⛅ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 21° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

பத்தேகம பொலிஸ் கொலை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை!

உள்ளூர்April 23, 2026 · 6 months முன்3
பத்தேகம பொலிஸ் கொலை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை!


பத்தேகம பகுதியில் சுற்றிவளைப்பு ஒன்றிற்குச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தரை கொலை செய்த பிரதிவாதிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 18 ஆண்டுகால நீண்ட வழக்கு விசாரணைக்குப் பின்னர், பலபிட்டிய மேல் நீதிமன்றத்தினால் நேற்று இந்தத் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. 

சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பத்தேகம பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரைச் சுட்டுக்கொலை செய்ததாகக் குற்றம் சுமத்தி, ஒரு ஆண் பிரதிவாதி மற்றும் மூன்று பெண் பிரதிவாதிகளுக்கு எதிராக பத்தேகம பொலிஸாரால் பலபிட்டிய மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

அங்கு, நான்காவது பிரதிவாதிக்கு மரண தண்டனையும், ஏனைய மூவரையும் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்தும் பலபிட்டிய மேல் நீதிமன்ற நீதவான் ருசிர வெலிவத்த உத்தரவிட்டார். அதன்படி, பத்தேகம காமிங்கல, மார்க சதி மாவத்தையைச் சேர்ந்த மெரெஞ்சி கங்கானம்கே பிரசாத் மனோரஞ்சன என்ற ‘களுத்துறை சூட்டி’ என்பவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 

விடுதலை செய்யப்பட்டவர்களில் இரண்டாவது பிரதிவாதியான குணத்திகொட லீலாவதி என்பவர் தற்போது உயிரிழந்துள்ளார். 
2008 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த ஒரு நாளில், பத்தேகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய திலீப் குமாரசிங்க (15615) மற்றும் ஜகத் நந்தன (50472) ஆகிய இரு அதிகாரிகளும் சுற்றிவளைப்பு ஒன்றிற்காகச் சென்றிருந்தனர். 

அங்கு, பலாபிட்டிய ரந்தொம்பே பகுதியைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் திலீப் குமாரசிங்க (15615) என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக ஒரு ஆண் பிரதிவாதி மற்றும் மூன்று பெண் பிரதிவாதிகளுக்கு எதிராக பத்தேகம பொலிஸாரால் பலாபிட்டிய மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரதிவாதி வெலிக்கடை சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.