2026 October 11, Sunday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 31° 🌧️ கண்டி 22° 🌧️ மட்டக்களப்பு 28°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

தெற்கு லெபனானில் இஸ்ரேல் படைகள் விலக வேண்டும் – பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் கோரிக்கை

உலகம்April 22, 2026 · 6 months முன்5
தெற்கு லெபனானில் இஸ்ரேல் படைகள் விலக வேண்டும் – பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் கோரிக்கை

தெற்கு லெபனானில் இஸ்ரேலிய படைகளால் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் இருந்து அவர்கள் வெளியேற வேண்டும் என்றும், ஹிஸ்புல்லா அமைப்பு தனது ஆயுதங்களைக் களைய வேண்டும் என்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் கோரிக்கை விடுத்துள்ளார்.

இப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.லெபனான் பிரதமருமடனான சந்திப்பை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இந்த வலியுறுத்தலை முன்வைத்துள்ளார்.

இதற்கிடையில், இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையிலான அடுத்தகட்ட அமைதிப் பேச்சுவார்த்தை நாளை அமெரிக்காவின் வோஷிங்டனில் நடைபெற உள்ளது. அமெரிக்காவிற்கான இஸ்ரேல் மற்றும் லெபனான் தூதர்களுக்கு இடையே இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.

தற்போது இரு தரப்பிற்கும் இடையே 10 நாட்கள் போர்நிறுத்தம் அமுலில் உள்ள நிலையில், அது வரும் 25ஆம் திகதி வரை நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.