2026 October 14, Wednesday ⛅ கொழும்பு 25° 🌧️ கண்டி 23° 🌧️ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

நாளை வங்கி கணக்குகளுக்கு வரும் அவெசும கொடுப்பனவு

உள்ளூர்April 21, 2026 · 6 months முன்8
நாளை வங்கி கணக்குகளுக்கு வரும் அவெசும கொடுப்பனவு

‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் கொடுப்பனவுகள் நாளை (22) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. 

 இதன்படி, ‘அஸ்வெசும’ திட்டத்தின் முதலாம் கட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட 617,406 முதியோருக்கான ஏப்ரல் மாதக் கொடுப்பனவாக 3 பில்லியன் 87 மில்லியன் 30 ஆயிரம் ரூபா செலுத்தப்படவுள்ளது. 

 அத்துடன், இரண்டாம் கட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட 72,525 முதியோருக்காக 362 மில்லியன் 6 இலட்சத்து 25 ஆயிரம் ரூபா செலுத்தப்படவுள்ளதாக அந்தச் சபை விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.