2026 October 17, Saturday ⛅ கொழும்பு 24° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 21° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

புத்தாண்டு நாட்களில் கொழும்பில் அதிகரித்த விபத்துக்கள்

உள்ளூர்April 15, 2026 · 6 months முன்2
புத்தாண்டு நாட்களில் கொழும்பில் அதிகரித்த விபத்துக்கள்

கடந்த 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மாத்திரம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 36 பாரதூரமான வீதி விபத்துகள் பதிவாகியுள்ளன. 

இந்த விபத்துக்களில் சிக்கி இருவர் உயிரிழந்தனர். 

ஏப்ரல் 13ஆம் திகதி 19 விபத்துகளும், புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ஆம் திகதி 17 விபத்துகளும் பதிவாகியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இதேவேளை, குறித்த இரண்டு நாட்களில் மாத்திரம் 35 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 

ஏப்ரல் 13ஆம் திகதி 14 மோதல்களும், நேற்று முதல் இன்று காலை வரையுமான காலப்பகுதியில் 21 மோதல்களும் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.