2026 October 11, Sunday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 32° 🌧️ கண்டி 24° 🌧️ மட்டக்களப்பு 28°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

கொழும்பிலிருந்து கண்டிக்கு விசேட பேருந்து சேவை

உள்ளூர்April 9, 2026 · 6 months முன்8
கொழும்பிலிருந்து கண்டிக்கு விசேட பேருந்து சேவை

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் பொதுமக்களின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், கொழும்பிலிருந்து கண்டிக்கு விசேட பேருந்து சேவைகளை முன்னெடுக்க போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன வெளியிட்டுள்ளார்.

புத்தாண்டுக்காகத் தமது சொந்த இடங்களுக்குச் செல்லும் பயணிகளின் நலன் கருதி இந்த விசேட போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி இந்த விசேட பேருந்து சேவைகள் நாளை முதல் நடைமுறைக்கு வரும்.இதேவேளை கொழும்பு, பஸ்டியன் மாவத்தை பேருந்து நிலையத்திலிருந்து இந்த பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும்.

புத்தாண்டு காலம் நிறைவடைந்த பின்னரும், வார இறுதி நாட்களில் திருத்தப்பட்ட நேர அட்டவணைக்கு அமைய இந்த விசேட பேருந்து சேவையைத் தொடர்ந்து முன்னெடுக்க எதிர்பார்ப்பதாக பிரதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.