2026 October 12, Monday 🌧️ கொழும்பு 29° 🌧️ யாழ்ப்பாணம் 31° ⛈️ கண்டி 27° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

IMF அங்கீகாரத்தால் இலங்கைக்கு 700 மில்லியன் டொலர்

உலகம்April 9, 2026 · 6 months முன்2
IMF அங்கீகாரத்தால் இலங்கைக்கு 700 மில்லியன் டொலர்

இலங்கையின் பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டத்தின் மதிப்பாய்வுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை அங்கீகாரம் வழங்கியவுடன், இலங்கைக்கு சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி கிடைப்பதற்கான வாய்ப்பு உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீரமைப்புத் திட்டத்தின் கீழ் இலங்கை அதிகாரிகள் முன்னெடுத்துள்ள பொருளாதார நடவடிக்கைகள், நிலையான மீட்சியை நோக்கிய முன்னேற்றத்தைக் காட்டுவதாக சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் உத்தியோகபூர்வ கையிருப்பு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது, மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி மற்றும் அரச வருமானத் திரட்டல் ஆகியன எதிர்பார்த்ததை விட சிறப்பாக அமைந்துள்ளன,நாட்டின் பொருளாதாரச் செயற்திறன் முன்னரே கணிக்கப்பட்டதை விட வலிமையாக உள்ளமை இந்த இணக்கப்பாட்டின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.