2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

மசகு எண்ணெய் விலையில் திடீர் சரிவு!

உலகம்April 8, 2026 · 4 months முன்0
மசகு எண்ணெய் விலையில் திடீர் சரிவு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிர போர்ச் சூழல் மற்றும் அரசியல் ஸ்திரமற்ற தன்மைக்கு மத்தியிலும், உலகளாவிய எரிசக்தி சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலை இன்று வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன.

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்க்கான கேள்வி மற்றும் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக விலை குறைந்துள்ளது. WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 96.39 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.

அதேவேளை, சர்வதேச ரீதியில் அதிகம் பயன்படுத்தப்படும் பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 95.37 அமெரிக்க டொலராக நிலவுகிறது.இதேவேளை, இயற்கை எரிவாயுவின் (Natural Gas) விலையிலும் இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளது.